Posts

Showing posts from May, 2019

திருவண்ணாமலை மாவட்டம் - ஓர் அறிமுகம்

Image
திருவண்ணாமலை மாவட்டம் - ஓர் அறிமுகம் நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை, பஞ்சபூதத் தலங்களில் அக்கினித்தலம், உலகப் புகழ்பெற்ற மகா தீபம், சைவக்குரவர்களால், மகான்களால் சிறப்புபெற்ற தலம், தென்னிந்தியாவின் மிகச் சிறப்பான கோயில் எனப் பலவாறாக புகழ்பெற்ற திருவண்ணாமலை தொல்லியல், வரலாறு மற்றும் மானுடவியல் நோக்கிலும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய மலைத்தொடர்களில் ஒன்றான கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கல்வராயன் மற்றும் ஜவ்வாதுமலைப் பகுதியின் கிழக்குப்பகுதியில் தென்வடக்காக நீண்ட பரப்பில் அமைந்துள்ளது திருவண்ணாமலை மாவட்டம். இம்மாவட்டத்தில் தென்பெண்ணையாறு, செய்யாறு மற்றும் பாலாறு ஆற்றுப் பகுதிகளில் பல அரிய தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன. வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள பில்லாந்தாங்கல் கிராமத்திலிருந்து பாலாற்றுக்குச் செல்லும் கால்வாய் அருகே அண்மையில் பழங்கற் காலத்தைச் சார்ந்த வெட்டுக்கருவிகள், கைக்கோடரிகள், கத்திகள், சுரண்டிகள் போன்ற கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள ஜவ்வாதுமலைத் தொடரில் அமைந்துள்ள பல கிராமங்களில...