Posts

திருவண்ணாமலை மாவட்ட அகழாய்வுகள்

Image
திருவண்ணாமலை மாவட்ட அகழாய்வுகள் திருவண்ணாமலை மாவட்டம் , புதிய கற்காலத்திலிருந்து சிறந்து விளங்கி வருகிறது .   குறிப்பாக   இம் மாவட்டம் முழுவதும் பெருங்கற்காலச் சின்னங்கள் பரவலாகக் காணப்படுவதால் ,   பெருங்கற்காலப் பண்பாடும் , அதனோடு இணைந்த சங்ககாலப் பண்பாடும் , இங்கு செழிப்புற்றிருந்தது என அறிய முடிகிறது .   இம்மாவட்டத்தின் செங்கம் பகுதியை நன்னன் என்ற ம ன்ன ன் ஆண்டு வந்தான் என்பதைச் சங்க இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன .   இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவட்டத்தில் மோட்டூர் , ஆண்டிப்பட்டி ( செங்கம் வட்டம் ) மற்றும்   படவேடு ( போளுர் வட்டம் ) ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல அரிய வரலாற்றுச் செய்திகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன .   அவை குறித்து இக்கட்டுரையில் காண்போம் . 1.    மோட்டுர்                 திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் திருவண்ணாமலையிலிருந்து தானிப்பாடி செல்லும் சாலையில் 30 கி . மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது .   மலையடிவாரத்தில் அமைந்துள்ள   இவ்வூ